நடிகர் பிரகாஷ்ராஜுக்கு, பிரதாப் சிம்ஹா எம்.பி. கண்டனம்


நடிகர் பிரகாஷ்ராஜுக்கு, பிரதாப் சிம்ஹா எம்.பி. கண்டனம்
x
தினத்தந்தி 5 Oct 2017 5:21 AM IST (Updated: 5 Oct 2017 5:20 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியை பற்றி அவதூறாக பேசிய நடிகர் பிரகாஷ்ராஜுக்கு பிரதாப் சிம்ஹா எம்.பி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மைசூரு,

பிரதமர் மோடியை பற்றி அவதூறாக பேசிய நடிகர் பிரகாஷ்ராஜுக்கு பிரதாப் சிம்ஹா எம்.பி கண்டனம் தெரிவித்து உள்ளார். இனிமேலும் பிரதமரை பற்றி அவதூறாக பேசினால் தகுந்த பதிலடி கொடுப்போம் என்று அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ்(வயது 55). பெண் பத்திரிகையாளரான இவரை கடந்த மாதம்(செப்டம்பர்) 5–ந் தேதி மர்மநபர்கள் அவரது வீட்டின் முன்பு வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவுரி லங்கேசை கொலை செய்த மர்மநபர்களை பிடிக்க உளவுத்துறை ஐ.ஜி. பி.கே.சிங் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு நடிகர் பிரகாஷ்ராஜ் பேசும்போது, கவுரி லங்கேசை கொலை செய்தவர்கள் இன்னும் பிடிபடவில்லை. கவுரி லங்கேசை பிரதமர் மோடியை பின்பற்றுபவர்கள் தான் கொலை செய்து இருக்க வேண்டும். அவர்களை தவிர வேறு யாரும் இந்த கொடூர செயலில் ஈடுபட முடியாது என்று கூறினார். பிரதமர் மோடி தன்னை பின்பற்றுபவர்கள் செய்து வரும் கொடூர செயல்களை கண்டுக்கொள்ளாமல் உள்ளார் என்று கூறினார்.

பிரதமர் மோடியை பற்றி அவதூறாக பேசிய நடிகர் பிரகாஷ்ராஜுக்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மைசூரு–குடகு தொகுதி பா.ஜனதா எம்.பி. பிரதாப் சிம்ஹா கூறும்போது:–

பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையை பிரதமர் மோடி பின்பற்றுபவர்கள் தான் செய்திருக்க வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்துக்கு எனது கண்டனத்தை தெரிவிக்கிறேன். பிரதமரை பற்றி அவருக்கு என்ன தெரியும். இனிமேலும் அவர் பிரதமர் மோடியை பற்றி அவதூறாக பேச கூடாது. அப்படி பேசினால் அவருக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story