நெல்லை மாவட்டத்தில், இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள்


நெல்லை மாவட்டத்தில், இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள்
x
தினத்தந்தி 6 Oct 2017 1:30 AM IST (Updated: 5 Oct 2017 7:29 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்களை கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:– அம்மா திட்ட முகாம் தமிழக முதல்–அமைச்சர் மக்களின் நலன் கருதி ‘அம்மா திட்டம்

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்களை கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

அம்மா திட்ட முகாம்

தமிழக முதல்–அமைச்சர் மக்களின் நலன் கருதி ‘அம்மா திட்டம்‘ என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு பயணம் செய்து நீண்ட நேரம் காத்திருந்து மனுக்களை அளிப்பதால் ஏற்படும் நேரம், செலவு மற்றும் பல்வேறு இன்னல்களை போக்குகிற வகையில் மக்கள் வசிக்கும் கிராமத்துக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் சென்று குறைகளை கேட்கும் வகையில் அம்மா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் ஒவ்வொரு கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில் முகாமிட்டு, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறையைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்கும் வகையில் அம்மா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) கீழ்க்கண்ட கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.

கிராமங்கள் விவரம்

நெல்லை வட்டம்– பழவூர், ராதாபுரம் வட்டம் – சடையனேரி, அம்பை வட்டம்– கீழ்முகம், நாங்குநேரி வட்டம்– மூலைக்கரைப்பட்டி, சேரன்மாதேவி வட்டம்– அத்தாளநல்லூர், பாளையங்கோட்டை வட்டம்– திடியூர், மானூர் வட்டம்– கட்டாரங்குளம், சங்கரன்கோவில் வட்டம்– குவளைக்கண்ணி, திருவேங்கடம் வட்டம்– சங்குப்பட்டி, வீரகேரளம்புதூர் வட்டம்– மேலமருதப்பபுரம், ஆலங்குளம் வட்டம்– சுப்பையாபுரம், கடையநல்லூர் வட்டம்– அரியநாயகிபுரம்.

மேற்கண்ட கிராமங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும். இலவச வீட்டுமனை பட்டாக்கள், முதியோர் உதவித்தொகை உள்பட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல்கள், உழவர் பாதுகாப்பு அட்டைகள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாதி சான்றிதழ்கள், இருப்பிட சான்றிதழ்கள், வருமான சான்றிதழ்கள், ரே‌ஷன் கார்டுகள் போன்றவை பெற விரும்புபவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு மனு அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.


Next Story