அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 6 Oct 2017 2:00 AM IST (Updated: 5 Oct 2017 9:02 PM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக மதிப்பூதியம் அடிப்படையில் தற்காலிகமாக 7 புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் உள்ளடக்கிய கல்வி திட்டம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக மதிப்பூதியம் அடிப்படையில் தற்காலிகமாக 7 புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

பயிற்சியாளருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்படும். இயன்முறை பயிற்சியாளர்கள், தொழில்சார் பயிற்சியாளர் மற்றும் பேச்சு பயிற்சியாளர் தேர்வு செய்யப்படுகின்றனர். இயன்முறை பயிற்சியாளர் பணிக்கு இளங்கலை பிசியோதெரபி படித்து இருக்க வேண்டும். தொழில்சார் பயிற்சியாளர் பதவிக்கு இளங்கலை தொழில்சார் பயிற்சி படிப்பும், பேச்சு பயிற்சியாளர் பணிக்கு இளங்கலை கேட்பு மற்றும் பேச்சுத்திறன் பயிற்சி அல்லது பி.எஸ்சி(ஸ்பீச் பேத்தாலஜி) படித்து இருக்க வேண்டும். இந்த படிப்புகளில் குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்.

தகுதியுள்ளவர்கள் வருகிற 10–ந்தேதி மாலை 5 மணிக்குள் உரிய கல்வி, அனுபவ சான்றிதழ் நகல்களுடன், சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம்.

இந்த தகவலை, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.


Next Story