விக்கிரமசிங்கபுரத்தில் தி.மு.க. பொதுக்கூட்டம்
விக்கிரமசிங்கபுரத்தில் தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் மூன்றுவிளக்கு திடலில் பொதுக்கூட்டம் நடந்தது.
விக்கிரமசிங்கபுரம்,
விக்கிரமசிங்கபுரத்தில் தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் மூன்றுவிளக்கு திடலில் பொதுக்கூட்டம் நடந்தது. நகர செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.
மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் தமயந்தி, வசந்தா, ஆரோக்கியமேரி, சரோஜா, சந்திரகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் செல்வி சங்குகிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் மற்றும் மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கணேசன் தொகுப்புரையாற்றினார். மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் ராஜம்ஜான், பொதுக்குழு உறுப்பினர் சேகர், மாணவர் அணி பிரபாகரன், விவசாய தொழிலாளர் அணி கணேசன், தொண்டரணி முத்துராமலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஜெனிபர் தினகர் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க மகளிர் அணி, மகளிர் தொண்டரணி ஆகியோர் செய்திருந்தனர்.