கல்வராயன்மலை நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: கோமுகி அணை 41 அடியை எட்டியது
கல்வராயன்மலை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் கோமுகி அணையின் நீர்மட்டம் 41 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கச்சிராயப்பாளையம்,
விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன்மலை அடிவாரத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் கோமுகி அணை உள்ளது. 46 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கு கல்வராயன்மலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் பொட்டியம், கல்படை, மல்லிகைப்பாடி ஆறுகள் வழியாக தண்ணீர் வரும்.
இந்த தண்ணீரை அணையில் 44 அடி வரை தேக்கி வைத்து, ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் விவசாய பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் மூலம் கச்சிராயப்பாளையம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதியில் 11 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதாலும், பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து போனது. மேலும் கோடை காலத்தில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக அணை தண்ணீரின்றி வறண்டது. இதனால் கடந்த ஆண்டு விவசாயிகள் சம்பா சாகுபடி செய்யவில்லை.
இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் கல்வராயன்மலை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கடந்த 1 மாதத்திற்கு முன்பு அணையில் 15 அடியாக இருந்த தண்ணீர் படிப்படியாக உயர்ந்து, நேற்று முன் தினம் காலை 38 அடியாக இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கல்படை, பொட்டியம், சித்தாறு, வாணியம்பாடி ஆகிய ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் 38 அடியாக இருந்த கோமுகி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து நேற்று மாலை 41 அடியை எட்டியது. மேலும் இந்த கனமழையால் கல்படை ஆற்றின் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் மல்லிகைப்பாடி வரை இயக்கப்பட்ட பஸ்கள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை பாலத்தை கடக்க முடியவில்லை. கல்படை ஆற்றின் அருகிலேயே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டி இருந்ததால் பெரிதும் அவதியடைந்தனர்.
பின்னர் மாலையில் ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்த பின்னரே கல்படை ஆற்றின் தரைப்பாலம் வழியாக பஸ்கள் இயக்கப்பட்டன.
தொடர்ந்து ஆற்றில் வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 41 அடியாக உள்ள கோமுகி அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி, பொதுப்பணித்துறை அதிகாரிகள், புதிய பாசன வாய்க்கால் வழியாக கோமுகி அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அருகில் உள்ள கிராமங்களுக்குள் வெள்ளம் புகாமல் தடுக்கவும், பாசன வாய்க்கால் உடையாமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன. தொடர் மழையால் பெரியார், மேகம், கவியம் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கரியாலூர்-வெள்ளிமலை சாலையில் உள்ள படகுகுழாம் மற்றும் தடுப்பணைகள் நிரம்பின.

Related Tags :
Next Story