அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலத்திற்குட்பட்ட 2, 3, 4, 7 ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் முன்னாள் கவுன்சிலர் மாரப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் காளியப்பன்,
அனுப்பர்பாளையம்,
ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி ஆகியோருடன் நேற்றுகாலை அனுப்பர்பாளையத்தில் உள்ள 1-வது மண்டல அலுவலகத்தில் திரண்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் அலுவலக வாசலில் கைகளில் கொடியை ஏந்தியபடி தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து உதவி பொறியாளர் ராம்மோகன் பொதுமக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சி பகுதிகளில் எந்த விதமான முன்னறிவிப்புமின்றி கட்டிடங்களை அளவீடு செய்து 10 மடங்குக்கு மேல் வரி விதிப்பு செய்யும் மாநகராட்சியின் நடவடிக்கையை கைவிட வேண்டும். 4 வார்டுகளிலும் குவிந்துள்ள குப்பைகளை அகற்றி, சாக்கடை கால்வாய்களை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என்றும், அப்பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள கழிவறைகளை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும். அப்பகுதிகளில் தார்சாலை மற்றும் சாக்கடை கால்வாய்கள் அமைக்க வேண்டும்.
மேலும் 3-வது வார்டில் மெதுவாக நடைபெறும் 3-வது குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் மற்றும் அந்த வார்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும். காந்திநகர் முதல் சுண்ணாம்பு சூளை வரை மழைநீர் மற்றும் சாக்கடை கழிவுநீர் செல்ல வசதியாக ராஜவாய்க்காலை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட உதவி பொறியாளர் ராம்மோகன் 4 வார்டுகளிலும் ரூ.40லட்சம் செலவில் தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 3-வது வார்டு உள்பட அனைத்து பகுதிகளுக்கும் 3-வது திட்ட குடிநீர் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
மேலும் 4 வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தையொட்டி அங்கு 15 வேலம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Tags :
Next Story