பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய பள்ளத்தில் மண் சரிந்து 2 தொழிலாளர்கள் சிக்கினர்
ராசிபுரத்தில பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக தோண்டிய பள்ளத்தில் மண் சரிந்து 2 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை தீயணைப்பு படையினர் பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர்.
ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. வழக்கம்போல் நேற்று பிற்பகல் 3 மணியளவில் ராசிபுரம் நகராட்சி 10-வது வார்டு வி.நகர் ரோடு 18-வது தெருவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக குழாய்கள் பதிக்கும் பணி நடந்தது.
நேற்று இந்த பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் 10 அடி ஆழ பள்ளத்தில் இறங்கி நில மட்டத்தை சரி செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்த மழையின் காரணமாக அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மண் சரிவு காரணமாக பணியில் ஈடுபட்டிருந்த திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, காளியாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சதீஷ் (வயது 21) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த முத்து (22) ஆகிய இருவரும் இடுப்பளவு மண்ணுக்குள் சிக்கிக் கொண்டனர்.
இது பற்றி ராசிபுரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு நிலைய அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். தீயணைப்பு படையினர் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், பாதாள சாக்கடை திட்டப்பணியில் ஈடுபட்டிருந்த மற்ற தொழிலாளர்கள் உதவியுடன் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடிய 2 தொழிலாளர்களையும் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.
உடனடியாக அவர்கள் இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பாதாள சாக்கடை திட்டப்பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது மண் சரிந்து விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story