டெங்கு ஒழிப்பு தினம்: மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
டெங்கு ஒழிப்பு தினத்தையொட்டி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவாரூரில் நடந்தது.
திருவாரூர்,
தமிழகம் முழுவதும் டெங்கு ஒழிப்பு தினம் கடைபிடிக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில் குமார் தலைமை தாங்கினார்.
அதனை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்தும் முறை குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பூச்சியியல் வல்லுனர் பழனிச்சாமி, அடியக்கமங்கலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலமுருகன், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஜெகதீசன், சாந்திமீனா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி தாளாளர் தியாகபாரி வரவேற்றார். முடிவில் தலைமை ஆசிரியர் சுந்தர் நன்றி கூறினார்.
நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கூட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். நீடாமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராணிமுத்துலட்சுமி, பேரூராட்சி செயல் அலுவலர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வட்டார சுகாதர ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
நன்னிலம் ஒன்றியம் சொரக்குடி கிராமத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மண்டல உதவி திட்ட அலுவலர் (டெங்கு) சார்லஸ்எட்வின் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் நிலவேம்பு கசாயத்தை வழங்கினார். இதில் டாக்டர் அருணா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருநாவுக்கரசு, ஆறுமுகம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவப்பிரகாசம், சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து சொரக்குடி, நரிக்குடி ஆகிய கிராமங்களில் வீடு-வீடாக சென்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
நீடாமங்கலம் வட்டாரத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை அலுவலர்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று நீடாமங்கலம் வட்டாரம் வடுவூர் அக்ரஹாரம் பஸ் நிறுத்தம் அருகே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் நிலவேம்பு கசாயத்தை 300 பேருக்கு நீடாமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானம், ராயபுரம் வட்டார மருத்துவ அலுவலர் ராணிமுத்துலட்சுமி ஆகியோர் வழங்கினர். முகாமில் வடுவூர் மருத்துவ அலுவலர் தினேஷ், சித்த மருத்துவ அலுவலர் வினோத், சுகாதார ஆய்வாளர்கள் பார்த்திபன், கவியரசன், ராஜேந்திரன் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story