கனமழை வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
கிருஷ்ணகிரி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியானார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே உள்ள தண்டேகுப்பத்தைச் சேர்ந்தவர் ராதா (வயது 75). இவருக்கு காளிரத்தினம்(50), வெங்கடசாமி(45), செல்வம்(36) ஆகிய 3 மகன்களும், புஷ்பா(38) என்ற மகளும் இருந்தனர். இதில் வெங்கடசாமிக்கு மட்டும் திருமணமாகி ஜெயந்தி என்ற மனைவியும், வசந்தகுமார் (16), பகவதி என்கிற சந்துரு (13), முல்லை (8) ஆகிய 3 குழந்தைகள் உண்டு. இந்தநிலையில் வெங்கடசாமி இறந்து விட்டதால் ஜெயந்தி தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். அவரது குழந்தைகள் 3 பேரும் பாட்டி ராதாவின் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர்.
மூதாட்டியான ராதாவுக்கு சொந்தமாக ஓட்டு வீடு உள்ளது. இந்த வீடு 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீடாகும். தற்போது அந்த வீட்டின் அருகில் உள்ள குடிசையில் ராதா குடியிருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் தனது குடிசையில் மகள் புஷ்பா (38), மற்றும் பேரன்கள் வசந்தகுமார் (16), பகவதி என்கிற சந்துரு (13), பேத்தி முல்லை (8) ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் அவரது ஓட்டு வீட்டு சுவர் ஈரப்பதமாக காணப்பட்டது. நேற்று முன்தினமும் கனமழை பெய்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் ராதாவின் ஓட்டு வீட்டுச்சுவர் அடியோடு சரிந்து குடிசையின் மீது விழுந்தது.
இதில் குடிசையில் தூங்கிக்கொண்டிருந்த ராதா, அவரது மகள் புஷ்பா, பேரன்கள் வசந்தகுமார், பகவதி என்கிற சந்துரு மற்றும் பேத்தி முல்லை ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். அந்த நேரம் மூதாட்டி ராதாவின் மகன் காளிரத்தினம் ஓட்டு வீட்டின் ஓரமாக படுத்திருந்தார். வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 5 பேரும் பலியானதை கண்டு அவர் அதிர்ச்சியில் அலறினார். அவரது அலறல் சத்தம் அக்கம் பக்கத்தில் இருந்த கிராம மக்கள் அங்கு விரைந்து வந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கிருஷ்ணகிரி மற்றும் பர்கூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் தங்கராஜ் (கிருஷ்ணகிரி), செல்வம் (பர்கூர்) தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதேபோல கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், இன்ஸ்பெக்டர்கள் அன்புமணி (கிருஷ்ணகிரி டவுன்), ஞானசேகரன் (காவேரிப்பட்டணம்) மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த இடத்திற்கு பொக்லைன் வரவழைக்கப்பட்டு இடிபாடுகளை அகற்றி 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. பின்னர் போலீசார் 5 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
பின்னர் கலெக்டர் கதிரவன் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று இறந்து போன 5 பேரின் உடல்களையும் பார்வையிட்டு, உடல்களை உடனடியாக பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். அப்போது உதவி கலெக்டர் அருண், தாசில்தார் கன்னியப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதற்கிடையே பிரேத பரிசோதனை முடிந்து 5 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் 5 பேரின் உடல்கள் தண்டேகுப்பம் கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திய உடன், அங்குள்ள சுடுகாட்டில் ஒரே இடத்தில் உடல்கள் புதைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.
சுவர் இடிந்து விழுந்ததில் பலியான பகவதி என்கிற சந்துருவும், முல்லையும் போகனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முறையே 8 மற்றும் 3-ம் வகுப்பு படித்து வந்தனர். பகவதியின் அண்ணன் வசந்தகுமார் 10-ம் வகுப்பு படித்து விட்டு வேலைக்கு சென்று வந்தார். பலியான மூதாட்டி ராதாவின் மகன்கள் காளிரத்தினம் குடிசை வீட்டிற்கு வெளியே தூங்கியதாலும், செல்வம் பெயிண்டிங் வேலைக்கு வெளியூர் சென்று விட்டதாலும் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது. வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தில் 5 பேர் பலியான சம்பவத்தால் தண்டேகுப்பம் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

Related Tags :
Next Story