குண்டும், குழியுமாக மாறிய கோவில்–சந்தவிளை சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


குண்டும், குழியுமாக மாறிய  கோவில்–சந்தவிளை சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 6 Oct 2017 4:15 AM IST (Updated: 6 Oct 2017 3:11 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி அருகே குண்டும், குழியுமாக மாறியுள்ள அவ்வையாரம்மன் கோவில்–சந்தவிளை சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழியில் இருந்து பூதப்பாண்டி செல்லும் சாலையில் புகழ்பெற்ற அவ்வையாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் இருந்து பிரியும் சாலை தோப்பூர் வழியாக சந்தவிளைக்கு செல்கிறது.

 சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த சாலை போடப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிறது. பல்வேறு கனரக வாகனங்கள் செல்வதால் சாலை முற்றிலும் பழுதடைந்து குண்டும்– குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த வழியாகவே ஆரல்வாய்மொழியில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் 33 டி அரசு பஸ்சும், ஆரல்வாய்மொழியில் இருந்து தடிக்காரன்கோணம் செல்லும் 319 பஸ்சும் செல்கிறது.

தோப்பூர் பகுதியில் உள்ள மாணவ–மாணவிகள் அருகில் உள்ள தாழக்குடி மேல்நிலைப்பள்ளிக்கு நடந்தே செல்கின்றனர். அப்போது வாகன போக்குவரத்தின்போது சாலையில் ஏற்படும் புழுதியால் அவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். மேலும் அந்த பகுதியில் வசிப்பவர்களும் புழுதியால் அவதிப்படுகின்றனர்.

 மழை நேரங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் நீர் தேங்கி நிற்பதால் பள்ளங்கள் தெரிவதில்லை. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, குண்டும் –குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story