அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மாணவ–மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு பேரணி
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மாணவ–மாணவிகள் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நாகர்கோவில்,
டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும், டெங்கு தடுப்பு குழு அமைக்கப்பட்டு மாவட்டந்தோறும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் டெங்கு தடுப்பு தினமாக கடைபிடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு, நேற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் டெங்கு தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மாணவ–மாணவிகள் பங்கேற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணிக்கு கல்லூரி டீன் கண்ணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இதுவரையில் 44 பேர் காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பேர் குழந்தைகள் ஆவர். காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும். வெளியே மருந்து கடைகளில் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளக்கூடாது. அதிகமாக தண்ணீர் பருக வேண்டும்.
டெங்குவை பொறுத்தவரையில் ரத்த தட்டணுக்கள் குறைந்து உயிர் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ரத்தத்தில் தட்டணுக்கள் குறையாமல் இருக்க தேவையான சத்தான உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் மருத்துவ கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், உறைவிட மருத்துவர் ஆறுமுகவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரணியில், டாக்டர்கள், மாணவ–மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர்கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story