16 உடல்கள் பிரேத பரிசோதனை: இலவச அமரர் ஊர்தி கிடைக்காததால் உறவினர்கள் அவதி
கோவை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று 16 உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. இதனால் இலவச அமரர் ஊர்தி கிடைக்காததால் அவதி அடைந்த உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர்.
கோவை,
கோவை மாவட்டத்தில் சாலை விபத்து, தற்கொலை செய்து இறந்தவர்களின் உடல்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில், பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த உடல்களை உறவினர்கள் இலவச அமரர் ஊர்திகள் மூலம் தங்களின் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்வது வழக்கம். இதற்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் 10 இலவச அமரர் ஊர்திகள் இருந்தன. இதில் தற்போது 5 வாகனங்கள் பழுதாகி விட்டன.
மீதம் உள்ள 5 வாகனங்களில் 2 வாகனங்கள் வெளியூர் சென்றுவிட்டன. இதனால், நேற்று 3 வாகனங்கள் மட்டுமே இருந்தன.
ஆனால் நேற்று ஒரே நாளில் 16 உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. இதனால் ஒரு ஊர்தியில் 3 உடல்கள் வரை அனுப்பியதாலும், பல மணிநேரம் தாமதம் ஆனதாலும் உறவினர்கள் மிகவும் அவதி அடைந்தனர்.
இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என்ற அவசரத்தில் இருந்த உறவினர்கள், அரசு வழங்கும் இலவச அமரர் ஊர்தி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தனியார் அமரர் ஊர்தியை கொண்டு வந்து உடல் களை கொண்டு செல்லலாமா? என்று கேட்டுள்ளனர்.
அதற்கு தனியார் வாகனங்களை கொண்டு வரக் கூடாது என்று அரசு அமரர் ஊர்தி ஓட்டுனர்கள் கூறினர். இதனால் உறவினர்களுக்கும், அமரர் ஊர்தி ஓட்டுனர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, பிரேத பரிசோதனை செய்யும் உதவியாளர்கள் பணம் கேட்பதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். அவர்களிடம் அங்கிருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
நீண்டநேர தாமதத்துக்கு பின்னர் அரசு அமரர் ஊர்தி மற்றும் தனியார் அமரர் ஊர்திகள் மூலம் உடல்கள் கொண்டு செல்லப்பட்டன.
இலவச அமரர் ஊர்தி இல்லாதது குறித்து கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ள தாகவும், இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story