குன்னூரில் டாக்டர்கள் இல்லாத அரசு ஆஸ்பத்திரி கோவைக்கு கர்ப்பிணிகளை அனுப்பி வைக்கிறார்கள்
குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்க்க டாக்டர்கள் இல்லாததால், கர்ப்பிணிகளை கோவைக்கு அனுப்பி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குன்னூர்,
குன்னூரில் உள்ள அரசு லாலி ஆஸ்பத்திரி பழமை வாய்ந்த ஆஸ்பத்திரி ஆகும். ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஆஸ்பத்திரி தாலுகாவின் தலைமை ஆஸ்பத்திரியாக செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டை கடந்த இந்த ஆஸ்பத்திரியில் குன்னூர் நகராட்சி பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுப்புறங்களில் உள்ள பல்வேறு கிராம பகுதிகளில் இருந்தும் சிகிச்சைக்காக ஏராளமான பொதுமக்கள் வருகிறார்கள். இங்கு அறுவை சிகிச்சை போன்ற அவசர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தாலுகா தலைமை ஆஸ்பத்திரி என்பதால் குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சாலைகளில் விபத்து ஏற்படும் போது அவர்களுக்கு அவசர சிகிக்சை அளிப்பதற்காக அரசு லாலி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வருகிறார்கள். ஏழை, எளிய, கர்ப்பிணி பெண்கள் இந்த ஆஸ்பத்திரியில் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக வருகிறார்கள்.
அதே நேரத்தில் கர்ப்பிணிகள் பிரசவத்திற் காகவும், கிராமப்புறங்களில் உள்ள சுகாதார நிலையங்களில் இருந்து கர்ப்பிணிகள், நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஆனால் இந்த ஆஸ்பத்திரியில் கடந்த 6 மாத காலமாக மயக்க டாக்டர் மற்றும் பிரசவம் பார்ப்பதற்கு டாக்டர் இல்லாத நிலை உள்ளது. இதனால் கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதனால் கர்ப்பிணிகள் பெரும் சிரமம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மயக்க டாக்டர் மற்றும் பிரசவ டாக்டர் உடனடியாக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து குன்னூர் நகர தி.மு.க. சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் முகமது அலி மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:-
அரசு ஆஸ்பத்திரி என்பது ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரியாக உள்ளது. வசதியற்ற ஏழை மக்கள் அரசு ஆஸ்பத்திரியை தேடி வருகிறார்கள். இதனால் அரசு ஆஸ்பத்திரியில் எல்லா நோய்க்கும் தனித்தனி டாக்டர்கள் உள்ளனர். ஆனால் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் மயக்க டாக்டரும், பிரசவ டாக்டரும் இல்லாமல் உள்ளனர். இங்கு பணியாற்றிய இந்த பிரிவு டாக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக தெரி கிறது. அதன் பின்னர் டாக்டர்கள் நியமிக்கப்படவில்லை.
இதனால் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்திற்காக வரும் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்ப்பது இல்லை. இதனால் அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஆம்புலன்ஸ் மூலம் இங்கிருந்து கோவைக்கு கொண்டு சென்றாலும், அங்கு தங்கும் செலவு அதிகரிக்கிறது. பிரவசத்திற்காக செல்லும் கர்ப்பிணிகளோடு செல்லும் உறவினர்களுக்கும் செலவு அதிகமாகிறது. இதனால் ஏழை எளிய மக்களின் பாடு திண்டாட்டமாக உள்ளது.
இதை கருத்தில் கொண்டு குன்னூர் அரசு ஆஸ்பத்தரிக்கு மயக்க டாக்டரையும், பிரசவ டாக்டரையும் நியமனம் செய்ய வேண்டும். குன்னூர் அரசு ஆஸ்பத்திரியிலேயே கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளியூர்களுக்கு சிகிச்சைக்கு அனுப்புவதை தவிர்க்க உரிய நடவடிக்கைகளை எடுக்க அரசு முன்வர வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story