நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மொட்டையடித்து போராட்டம்


நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மொட்டையடித்து போராட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2017 5:00 AM IST (Updated: 6 Oct 2017 5:00 AM IST)
t-max-icont-min-icon

7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுவை மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கூட்டமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களது போராட்டம் 87 நாட்களை கடந்து நேற்று 88–வது நாளாக நீடித்தது.

நேற்றைய போராட்டத்தின்போது ஊழியர்கள் உள்ளாட்சித்துறை அலுவலகத்தில் மொட்டை அடித்து கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இந்த போராட்டத்துக்கு புதுவை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அமைப்பு செயலாளர் இருசப்பன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஜோசப் முன்னிலை வகித்தார்.

அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லட்சுமணசா, கவுரவ தலைவர் உதயகுமார், புதுச்சேரி நகராட்சி கூட்டமைப்பு தலைவர் வினாயகவேல் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

போராட்டத்தில் புதுவை நகராட்சி சுகாதார நற்பணி தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் அய்யப்பன், ஓட்டுநர் சங்க செயலாளர் சந்தியாகு, புதுவை நகராட்சி பணிமனை ஊழியர்கள் சங்க செயலாளர் ஜெயமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story