சரக்கு, சேவை வரி திட்டத்தால் கர்நாடகத்துக்கு இழப்பீடாக மத்திய அரசு ரூ.1,189 கோடியை வழங்கியது
கர்நாடக விவசாயத்துறை மந்திரியும், சரக்கு, சேவை வரி கவுன்சில் உறுப்பினருமான கிருஷ்ண பைரேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெங்களூரு
கர்நாடகத்தில் சரக்கு, சேவை வரி திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கர்நாடக அரசுக்கு வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் ஏற்பட்ட வரி இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு ரூ.1,189 கோடி வழங்கியுள்ளது. நாங்கள் வரி இழப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறோம். வரும் நாட்களில் மாநிலங்களுக்கு வரி இழப்பு ஏற்படாது என்று எதிர்பார்க்கிறோம். அடுத்த சில மாதங்களில் நிலைமை சீரடையலாம். மாநிலங்களுக்கான வரி வருவாய் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் இழப்பீட்டுக்காக மத்திய அரசு மீது அழுத்தம் கொடுக்க தேவை இருக்காது என்று நான் கருதுகிறேன். அடுத்த சில ஆண்டுகளில் மாநிலங்கள் இழப்பீட்டை நம்பி இருக்க வேண்டிய நிலை இருக்காமல் போகலாம்.
இவ்வாறு கிருஷ்ண பைரேகவுடா கூறினார்.

Related Tags :
Next Story