தூத்துக்குடியில், திருமண ஆசைகாட்டி சிறுமியை கர்ப்பிணியாக்கிய வண்ணமீன் கடைக்காரர் கைது


தூத்துக்குடியில், திருமண ஆசைகாட்டி சிறுமியை கர்ப்பிணியாக்கிய வண்ணமீன் கடைக்காரர் கைது
x
தினத்தந்தி 7 Oct 2017 2:00 AM IST (Updated: 6 Oct 2017 7:30 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில், திருமண ஆசை காட்டி சிறுமியை கர்ப்பிணியாக்கிய வண்ண மீன்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில், திருமண ஆசை காட்டி சிறுமியை கர்ப்பிணியாக்கிய வண்ண மீன்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

மீன்கடை

தூத்துக்குடி சமீர்வியாஸ் நகரை சேர்ந்தவர் லூயிஸ். இவருடைய மகன் ஆனந்தராஜ் (வயது 32). இவர், அதே பகுதியில் வண்ண மீன்கள் விற்பனை செய்யும் கடை வைத்து உள்ளார். இவருடைய கடைக்கு, சிலுவைப்பட்டி ஜாகிர்உசேன் நகரை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர், வண்ண மீன்கள் வாங்க அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமிக்கும் ஆனந்தராஜூக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது.

பாலியல் பலாத்காரம்

இந்த நிலையில் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி கொடுத்து, அவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

அந்த சிறுமி 9 மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிந்த சிறுமியின் தாய், சம்பவத்தன்று ஆனந்தராஜை சந்தித்து, சிறுமியை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டாராம். அதற்கு மறுத்ததுடன், அவருடன் ஆனந்தராஜ் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

குழந்தை பிறந்தது

இதனையடுத்து அந்த சிறுமியின் தாயார் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே அந்த சிறுமி பிரசவத்திற்காக தூத்துக்குடி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அந்த சிறுமிக்கு நேற்று காலையில் குழந்தை பிறந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story