ஓட்டப்பிடாரம் அருகே முதியவர் அடித்து கொலை தொழிலாளி கைது
ஓட்டப்பிடாரம் அருகே முதியவரை கம்பால் அடித்து கொன்ற கூலி தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
ஓட்டப்பிடாரம்,
ஓட்டப்பிடாரம் அருகே முதியவரை கம்பால் அடித்து கொன்ற கூலி தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கூலி தொழிலாளிஓட்டப்பிடாரம் அருகே உள்ள முறம்பன் காலனி தெருவை சேர்ந்தவர் கோவில்சாமி (வயது 60). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி வசந்தா. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்தவர் தங்கபாலன் மகன் செந்தூர் (38). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தி (30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
அடித்து கொலைகோவில்சாமி அடிக்கடி செந்தூர் மனைவி சாந்தியை ஜாடை பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனை பல முறை செந்தூர் கண்டித்துள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து சாந்தியை ஜாடை பேசி வந்தாராம்.
நேற்று முன்தினம் இரவு அவர் மீண்டும் சாந்தியை ஜாடை பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த செந்தூர் அவரிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றவே அருகில் கிடந்த கம்பை எடுத்து அவருடைய தலையில் செந்தூர் பலமாக தாக்கினாராம். இதில் கோவில்சாமி மயங்கி கீழே விழுந்தார்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிர் இழந்தார்.
கைதுஇந்த சம்பவம் குறித்து மணியாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்தூரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.