இரட்டை கொலை வழக்கில் மேலும் 15 பேர் கைது
கடப்பாக்கம் குப்பம் கிராமத்தில் வன்முறை காரணமாக நடந்த இரட்டை கொலை வழக்கில் மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுராந்தகம்,
காஞ்சீபுரம் மாவட்டம் கடப்பாக்கம் குப்பத்தில் கடந்த மாதம் 1–ந்தேதி இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இதில் அதே பகுதியை சேர்ந்த சேகர், ராமகிருஷ்ணன் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் கடப்பாக்கம் குப்பத்தில் கடந்த மாதம் 1–ந்தேதி இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இதில் அதே பகுதியை சேர்ந்த சேகர், ராமகிருஷ்ணன் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேலும், வீடுகள், படகுகள், மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக ஆலம்பர ஊத்துகாட்டு அம்மன் குப்பத்தை சேர்ந்த 33 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கடப்பாக்கம் ஆலம்பர குப்பத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 36), லெலின்(30), கணேசன், பாண்டியன்(40), செந்தில்குமார்(26), நாகூரான்(36), பாக்கியராஜ்(34), தினேஷ் (24), மதன்(24), சந்திரன்(37), உமாசங்கர், வேலு(27), வினோத்குமார்(26), காசிநாதன்(25), சக்திவேல்(40) ஆகிய 15 பேரை மதுராந்தகம் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
அவர்களை மதுராந்தகம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். கலவரம் ஏற்பட்ட கிராமத்தில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை என கூறப்படுகிறது. போலீசார் இருதரப்பை சேர்ந்தவர்கள் கைது செய்து சுமுக தீர்வுகாண நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், மாவட்ட வருவாய்த்துறையினர் இருதரப்பினரையும் அழைத்து இந்த பிரச்சினைக்கு சமூக தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story