திருப்போரூர் அருகே மதுக்கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள கண்டிகையிலிருந்து வெங்கடாமங்களம் செல்லும் சாலையில் கடந்த வாரம் புதிய டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது.
திருப்போரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள கண்டிகையிலிருந்து வெங்கடாமங்களம் செல்லும் சாலையில் கடந்த வாரம் புதிய டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. அந்த கடைக்கு அருகில் பள்ளி, கல்லூரி இருப்பதால் மாணவ–மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருப்பதாக கூறி நேற்று அப்பகுதி மக்கள் 50–க்கும் மேற்பட்டவர்கள் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாழம்பூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் முற்றுகையிட்ட பொதுமக்களிடம் மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுக்கும்படி கூறினர். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படவில்லை. பின்னர் தற்காலிகமாக மதுக்கடை மூடப்பட்டதால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story