விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 4 பேர் கைது


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 4 பேர் கைது
x
தினத்தந்தி 7 Oct 2017 4:00 AM IST (Updated: 6 Oct 2017 11:15 PM IST)
t-max-icont-min-icon

மறைமலைநகர் அடுத்த கூடலூர் நாகவள்ளி அம்மன் கோவில் அருகே நேற்று முன்தினம் மாலை புதியதாக அரசு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

வண்டலூர்,

மறைமலைநகர் அடுத்த கூடலூர் நாகவள்ளி அம்மன் கோவில் அருகே நேற்று முன்தினம் மாலை புதியதாக அரசு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், விடுதலைச்சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்களும் கடையை மூடக்கோரி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கடையை மூட மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கடையில் இருந்த மதுபாட்டிகளை எடுத்து சாலையில் போட்டு உடைத்தனர்.

இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் டாஸ்மாக் கடையில் இருந்த மதுபாட்டில்களை சூறையாடியதாக அதே பகுதியை சேர்ந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பிரகாஷ் (வயது 32), சூரியகுமார்(23), ஆறுமுகம்(45), வீரா(19) ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதில் தலைமறைவாக உள்ள 9 பேரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் புதிதாக திறக்கப்பட்ட அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது.


Next Story