வண்டலூரில் அரசு பஸ் மோதி அக்காள்–தங்கை பலி
சென்னை பெருங்குடி கோதண்டராமன் நகரை சேர்ந்தவர் சக்கரபாணி. இவரது மனைவி லலிதா(வயது 58). வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தனசேகர். இவரது மனைவி விஜயா(53).
வண்டலூர்,
சென்னை பெருங்குடி கோதண்டராமன் நகரை சேர்ந்தவர் சக்கரபாணி. இவரது மனைவி லலிதா(வயது 58). வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தனசேகர். இவரது மனைவி விஜயா(53). இவர்கள் அக்காள்–தங்கை ஆவார்கள். இவர்கள் இருவரும் நேற்று மாலை சொந்த வேலை காரணமாக வண்டலூர் சென்றனர்.
ரெயில் நிலையம் அருகே உள்ள ஜி.எஸ்.டி. சாலையை கடக்க முயன்ற போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் இருவர் மீதும் பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த லலிதாவும், விஜயாவும் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் செங்கல்பட்டு–தாம்பரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.