சுடுகாட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கும்மிடிப்பூண்டியை அடுத்த கம்மார்பாளையம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் யாரோ சிலர் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக தாசில்தார் அலுவலகத்திற்கு நேற்று தகவல் வந்தது.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டியை அடுத்த கம்மார்பாளையம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் யாரோ சிலர் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக தாசில்தார் அலுவலகத்திற்கு நேற்று தகவல் வந்தது. இதையடுத்து தாசில்தார் ராஜகோபால் தலைமையில் வட்டவழங்கல் அதிகாரி மதியழகன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு 22 மூட்டைகளில் மொத்தம் 1 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இந்த ரேஷன் அரிசி மூட்டைகள் பஞ்செட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வணிபக்கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story