விழுப்புரத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விழுப்புரத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Oct 2017 4:15 AM IST (Updated: 7 Oct 2017 12:37 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் இன்பஒளி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் அப்பாவு முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் பெரியசாமி தொடக்க உரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.

வறட்சியால் வேலையிழந்துள்ள விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் தீபாவளி பண்டிகை உதவித்தொகை வழங்க வேண்டும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தில் திருத்தம் செய்து பேரூராட்சி, நகராட்சி பகுதிகளிலும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சவுரிராஜன், நிர்வாகிகள் கலியமூர்த்தி, ராமச்சந்திரன், பாலமுருகன், வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்புக்குழு நிர்வாகி நாராயணன் நன்றி கூறினார்.


Next Story