சிதம்பரத்தில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சிதம்பரத்தில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட செயலாளர் வி.எம்.சேகர், விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் காசிலிங்கம், பொருளாளர் பட்டுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 ஆயிரம் தீபாவளி பண்டிகை உதவி தொகையை வழங்கிட வேண்டும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் திருத்தம் செய்து பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் திட்டத்தை செயல்படுத்திட வேண்டும், மேலும் இந்த திட்டத்தில் 200–நாட்கள் வேலை வழங்கிட வேண்டும், குறைந்த பட்ச ஊதியமாக ரூ.400 வழங்கிட வேண்டும், வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உடனுக்குடன் ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.
இதில் வட்ட செயலாளர் குப்புசாமி, வட்ட தலைவர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் தமிமுன்அன்சாரி நன்றி கூறினார்.