திருப்பூரில், முன்விரோதம் காரணமாக டீ மாஸ்டரை கொலை செய்த ஆட்டோ டிரைவர் கைது
திருப்பூரில் முன்விரோதம் காரணமாக டீ மாஸ்டரை கொலை செய்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்,
இந்த பேக்கரிக்கு அருகே உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தை சேர்ந்த செல்வக்குமார்(31) என்பவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த மாதம் 30–ந் தேதி முத்துசாமிக்கும், செல்வக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் சத்தம் போட்டு அங்கிருந்து அனுப்பி விட்டனர். அதன்பிறகு முத்துசாமி அந்த பேக்கரிக்கு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் கார்த்திக், ராக்கியாபாளையம் பிரிவில் உள்ள பேக்கரிக்கு சென்றுள்ளார். அப்போது அவருடைய தந்தை முத்துசாமியும் அங்கு வந்துள்ளார். அப்போது முன்விரோதம் காரணமாக அங்கிருந்த ஆட்டோ டிரைவர் செல்வக்குமாருக்கும், முத்துசாமிக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதில் கோபம் அடைந்த செல்வக்குமார், முத்துசாமியை பிடித்து கீழே தள்ளியதாக தெரிகிறது. இதனால் கீழே கிடந்த கல்லின் மீது விழுந்த முத்துசாமியின் நெற்றியில் ரத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்த கார்த்திக் மற்றும் அங்கிருந்தவர்கள் முத்துசாமியை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனை செய்து பார்த்து விட்டு முத்துசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கார்த்திக் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் ஊரக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து செல்வக்குமாரை நேற்று கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.