திருவாரூரில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் கலெக்டர் நிர்மல்ராஜ் வழங்கினார்
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது.
திருவாரூர்,
இதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் ரெயில் நிலையம், பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் கலெக்டர் நிர்மல்ராஜ் கலந்துகொண்டு, நிலவேம்பு கசாயத்தை பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு தினத்தையொட்டி அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை முழுவதும் அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, எலும்பு வலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளாகும்.
வாரத்திற்கு ஒரு முறை நீர் சேமிக்கும் தொட்டிகளை சுத்தமாக கழுவ வேண்டும். பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையை அணுகி ரத்த பரிசோதனை செய்து உரிய சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலை தடுக்க நிலவேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாற்றினை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
அப்போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் காந்திராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.
இந்திய மருத்துவத்துறை ஆணையர் மோகன்பியாரே அறிவுறுத்தலின்பேரில் ஒருங்கிணைந்த திருவாரூர், நாகை மாவட்ட சித்த மருத்துவஅலுவலர் ஏ.சி.காந்த் வழிகாட்டுதலின் பெயரிலும், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ பிரிவின் சார்பில் கடந்த 2 மாதங்களாக டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வும், தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் கூடும் இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட உள்ளது. இதன் முதல் கட்டமாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் டாக்டர்.அனுஷா, மருந்தாளுனர் வள்ளி ஆகியோர் தலைமையில் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
இதேபோல அரசு மருத்துவர் விஜயா தலைமையில், திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் ஆடலரசன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் பாண்டியன் தலைமையில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் மன்னார்குடி கிழக்கு ஒன்றிய தே.மு.தி.க. சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சண்முகராஜ் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். பின்னர் வடபாதிமங்கலம் பகுதிகளில் வீடு-வீடாக சென்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர். இதில் மன்னார்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா, ஒன்றிய துணைச்செயலாளர்கள் முகமதுமுகையதீன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோட்டூர் அருகே புத்தகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பள்ளி மாணவ-மாணவி களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற தொடக்க கல்வி அலுவலர் புகழேந்தி தலைமை தாங்கினார். பள்ளி முதுகலை ஆசிரியர் கலைச்செல்வன் மாணவ- மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார். இதில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வீரசேகரன், கோட்டூர் ஒன்றிய வீர தமிழர் முன்னணி செயலாளர் கனகராஜ், ஒன்றிய உழவர் பாசறை இணை செயலாளர் சாய்கார்த்தி, ஒன்றிய தகவல் தொடர்பு செயலாளர் திலிபன், ஒன்றிய இளைஞர் இணை செயலாளர் கவிபிரபாகரன், ஒன்றிய பொருளாளர் சேது, கிளை செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story