மளிகை கடைக்காரர் உள்பட 4 பேரிடம் ரூ.1 கோடி மோசடி தனியார் நிறுவன ஊழியர் கைது
திருச்செங்கோட்டில் மளிகை கடைக்காரர் உள்பட 4 பேரிடம் ரூ.1¼ கோடி மோசடி செய்த வழக்கில் தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
திருச்செங்கோடு,
திருச்செங்கோடு டவுன், வேலூர் ரோடு சி.எச்.பி. காலனியில் மளிகை கடை நடத்தி வரும் பாலசுப்பிரமணியம் என்பவர் திருச்செங்கோடு நகர போலீசில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:- திருச்செங்கோட்டில் உள்ள ஒரு சிகரெட் சப்ளை செய்யும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்த சிறுமொளசியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் 4 மாதங்களுக்கு முன்பு என்னிடம் வந்து மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதிக்க போகிறது. எனவே சிகரெட் பண்டல்களை அதிகம் வாங்கி ஸ்டாக் வைத்துக்கொண்டால் வரி விதிப்புக்கு பிறகு உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்.
இதை நம்பி நான் மளிகை கடையில் கிடைத்த வருமானத்தை சிறுக சிறுக அவரிடம் கொடுத்தேன். மொத்தம் ரூ.61 லட்சம் வரை வாங்கிக்கொண்ட அவர் சிகரெட் பண்டல்களையும் தரவில்லை. நான் கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. அவரது நிறுவனத்தில் அவரை பற்றி விசாரித்தபோது அவர் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது. எனவே அவரை கண்டு பிடித்து, எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த புகாரின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவுப்படி, திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மேற்பார்வையில், டவுன் இன்ஸ்பெக்டர் பாரதி மோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இதில், மளிகை கடைக்காரர் பாலசுப்பிரமணியிடம் ரூ.61 லட்சமும் மற்றும் திருச்செங்கோடு கூட்டப்பள்ளியை சேர்ந்த நாகராஜனிடம் ரூ.14 லட்சமும், திருச்செங்கோடு எஸ்.என்.டி. ரோட்டை சேர்ந்த செந்திலிடம் ரூ.37 லட்சத்து 44 ஆயிரமும், திருச்செங்கோடு மேற்கு ரத வீதியில் சிப்ஸ் கடை வைத்திருக்கும் வைரமுத்து என்பவரிடம் ரூ.12 லட்சத்து 40 ஆயிரமும் என ரூ.1¼ கோடி வரை மோசடி செய்திருந்தது தெரியவந்தது. இதேபோல அவர் மேலும் சிலரிடமும் பண மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் மளிகை கடைக்காரர் பாலசுப்பிரமணியம் போலீசில் புகார் செய்ததை அறிந்த ஆனந்தன் நேற்று முன்தினம் திருச்செங்கோட்டுக்கு வந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாலசுப்பிரமணியம் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதன்பேரில் போலீசார் விரைந்து சென்று ஆனந்தனை (30) கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Related Tags :
Next Story