ஆரல்வாய்மொழியில் மீன் கழிவுகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி பறிமுதல்


ஆரல்வாய்மொழியில் மீன் கழிவுகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 7 Oct 2017 4:35 AM IST (Updated: 7 Oct 2017 4:35 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழியில் மீன் கழிவுகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பேரூராட்சி நிர்வாகம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி சோதனை சாவடி வழியாக நேற்று காலை 5 மணிக்கு ஒரு கன்டெய்னர் லாரி கடந்து சென்றது. அப்போது, அந்த லாரியில் இருந்து துர்நாற்றம் வீசுவதை போலீசார் கவனித்தனர்.

உடனே, போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அழுகிய நிலையில் மீன் கழிவுகளை ஏற்றி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார், லாரியை ஓட்டி வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த கண்ணன் (வயது 48) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கேரள மாநிலம் தானூரில் இருந்து மீன் கழிவுகளை ஏற்றிக்கொண்டு நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே நக்கநேரியில் உள்ள எண்ணெய் தொழிற்சாலைக்கு செல்வது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து போலீசார் லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர், ஆரல்வாய்மொழி பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. மீன் கழிவுகளை ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரிக்கு பேரூராட்சி நிர்வாகம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், மீன் கழிவுகளை அப்பகுதியில் கொட்டி அழித்தனர்.


Next Story