மரக்கடை அதிபர் வீட்டில் கொள்ளை: நெல்லை கோர்ட்டில் ஒருவர் சரண்

மரக்கடை அதிபர் வீட்டில் கொள்ளை: நெல்லை கோர்ட்டில் ஒருவர் சரண்
x
தினத்தந்தி 8 Oct 2017 2:00 AM IST (Updated: 7 Oct 2017 9:24 PM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை சீவலப்பேரி ரோட்டை சேர்ந்த மரக்கடை அதிபர் பெஞ்சமின் பெலிக்கான் (வயது 61). இவருடைய மனைவி மார்ட்லின் (55). இவர்களுடைய மகள் சுகிமேரி.

நெல்லை,

பாளையங்கோட்டை சீவலப்பேரி ரோட்டை சேர்ந்த மரக்கடை அதிபர் பெஞ்சமின் பெலிக்கான் (வயது 61). இவருடைய மனைவி மார்ட்லின் (55). இவர்களுடைய மகள் சுகிமேரி.

கடந்த மாதம் 25–ந் தேதி மார்ட்லின், சுகிமேரி ஆகிய இருவர் மட்டும் வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் தாய்– மகளை கட்டிப்போட்டு, வீட்டில் இருந்த 141 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்தனர்.

இதுதொடர்பாக பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமையன்பட்டியை சேர்ந்த இமான், பிரபு என்ற லட்சுமணன், தச்சநல்லூர் தேனீர்குளத்தை சேர்ந்த கருப்பசாமி என்ற கருப்பன் (19) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை, பணத்தையும் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ராமையன்பட்டியை சேர்ந்த பிரபுவின் தம்பி மதன் என்ற மதன்குமாரை (23) போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் மதன் நேற்று நெல்லை 3–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து மதனை போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story