மறைமலைநகர் அருகே ரவுடி வெட்டிக்கொலை வேதனையில் மனைவி தற்கொலை
மறைமலைநகர் அருகே ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். துக்கத்தில் அவரது மனைவி தற்கொலை செய்துகொண்டார்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் உள்ள பேரமனூர், அன்னை தெரசா தெருவை சேர்ந்தவர் தமிழ் அழகன் (வயது 27). ரவுடியான இவர் மீது மறைமலைநகர் போலீசில் 2 கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
சில நாட்களுக்கு முன்பு ஒரு வழக்கில் மறைமலைநகர் போலீசார் தமிழ் அழகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 4-ந் தேதி சிறையில் இருந்து தமிழ் அழகன் ஜாமீனில் வெளியே வந்ததாக தெரிகிறது. தமிழ் அழகன் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் மறைமலைநகரில் இருந்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் பேரமனூர் யூனியன் சாலை அருகே வழிமறித்தது. தமிழ் அழகன் உடனே மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓட முயன்றார். அந்த கும்பல் தமிழ் அழகனை விரட்டிச்சென்று சரமாரியாக வெட்டியது.
அவர்களிடம் இருந்து தப்பி ரத்தம் சொட்ட அருகில் உள்ள வீட்டில் தமிழ் அழகன் தஞ்சம் அடைந்தார். அந்த கொலை கும்பலும் அந்த வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. இதில் தமிழ் அழகன் அந்த இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
இந்த தகவலை அறிந்த மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் தன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியதால் நேற்று முன்தினம் இரவு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தனது கணவரை கொலை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ் அழகன் மனைவி நீலவேணி நேற்று முன்தினம் இரவு மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார்.
வீடு திரும்பிய அவர் இரவு முழுவதும் தனது கணவர் கொலை செய்யப்பட்டதை நினைத்து துக்கம் தாங்காமல் அழுதுகொண்டே இருந்தார். நீலவேணி நேற்று அதிகாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மறைமலைநகர் போலீசார் நீலவேணியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த 2 சம்பவங்கள் குறித்தும் மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக ரவுடி தமிழ் அழகன் வெட்டி கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தனிப்படை போலீசார் இந்த கொலை தொடர்பாக பேரமனூர், அம்பேத்கர் தெருவை சேர்ந்த புஷ்பராஜ் (26), பேரமனூர் யூனியன் சாலையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (23), அனுமந்தபுரத்தை சேர்ந்த தினகரன் (25) ஆகிய 3 பேரை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த கொலையில் தொடர்புடைய மேலும் பலரை போலீசார் தேடிவருகின்றனர்.
ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டதும், சில மணி நேரத்தில் அவரது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதும் பேரமனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story