திருப்பூர் மாநகராட்சி ஊழியர் மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை
திருப்பூர் மாநகராட்சி ஊழியர் மனைவுயுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லை காரணமாக அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர்,
கலைவாணியின் பெற்றோர் வீடு திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே இருப்பதால் தினமும் பள்ளி முடிந்து குழந்தைகள் 3 பேரும் தனது பாட்டி வீட்டிற்கு செல்வது வழக்கம். நேற்றும் அதுபோல் குழந்தைகள் 3 பேரும் பள்ளி முடிந்து பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் அவர்களை இரவில் உறவினர் ஒருவர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது பாலமுருகனை அழைத்தும் வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த அவர் வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்துள்ளார். அப்போது வீட்டு உத்திரத்தில் பாலமுருகனும், கலைவாணியும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தவர்களின் உடல்களை மீட்டனர். இதன் பின்னர் 108 ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டு அவர்களது உடல்களை ஏற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கடன் தொல்லை காரணமாக தம்பதி தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது குடும்ப பிரச்சினையா?, வேறு ஏதேனும் காரணமா என்பது உள்பட பல கோணங்களில் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருப்பூர் மாநகராட்சி ஊழியர் மனைவியுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.