டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்ற 150 பேர் கைது


டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்ற 150 பேர் கைது
x
தினத்தந்தி 8 Oct 2017 4:30 AM IST (Updated: 8 Oct 2017 2:10 AM IST)
t-max-icont-min-icon

கோட்டைப்பட்டினம் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்ற 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே உள்ள கரகத்திக்கோட்டையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது. இந்த டாஸ்மாக்கடை திறந்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் அங்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த கடைக்கு சீல் வைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த டாஸ்மாக்கடை மீண்டும் திறக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து ஊர்வலமாக வந்த 150 பேரை போலீசார் தடுத்து நிறுத்திகைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் அப்பகுதியில் உள்ள திருமணமண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர். 

Related Tags :
Next Story