சேலம் செவ்வாய்பேட்டையில் ரூ.50 கோடி மதிப்புள்ள நிலம் காவல்துறையிடம் ஒப்படைப்பு


சேலம் செவ்வாய்பேட்டையில் ரூ.50 கோடி மதிப்புள்ள நிலம் காவல்துறையிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 8 Oct 2017 4:35 AM IST (Updated: 8 Oct 2017 4:35 AM IST)
t-max-icont-min-icon

சேலம் செவ்வாய்பேட்டையில் போக்குவரத்து போலீஸ் உதவி கமி‌ஷனர் அலுவலகம் அருகில் 50 கோடி மதிப்புள்ள 70 சென்ட் நிலம் உள்ளது.

சேலம்,

 அந்த நிலத்தின் வருவாய் ஆவணங்களை சிலர் போலியாக தயார் செய்து, நிலத்திற்கு உரிமைக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதே வேளையில் மாநகர போலீஸ் தரப்பிலும் ஆவணங்களை தாக்கல் செய்து, அந்த நிலம் காவல்துறைக்கே சொந்தமானது என வக்கீல் மூலம் வாதாடினர்.

இந்த பிரச்சினை தொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி, விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இது தொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி இருதரப்பினரையும் அழைத்து பேசினார். மேலும் நிலம் தொடர்பான ஆவணங்களையும் சரிபார்த்தார். அதைத்தொடர்ந்து ரூ.50 கோடி மதிப்புள்ள நிலம் மாநகர காவல்துறைக்கே சொந்தமானது என கலெக்டர் ரோகிணி நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.

இந்தநிலையில் நேற்று சேலம் மத்திய தாசில்தார் லெனின், மண்டல துணை தாசில்தார் பார்த்தசாரதி, வட்ட துணை ஆய்வாளர் முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் நிலத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கம்பி வேலிகள், இரும்பு தட்டிகள், அங்கிருந்த பொருட்களை பொக்லைன் எந்திரம் கொண்டு அகற்றினர். அதன்பின் காவல்துறையினரிடம் அந்த நிலம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story