தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேரிடம் பணம், செல்போன்கள் வழிப்பறி 2 கொள்ளையர்கள் கைது
சேலத்தில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேரிடம் பணம், செல்போன்கள் வழிப்பறி செய்த திருச்சியை சேர்ந்த 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
நாமக்கல் மாவட்டம் செம்பாறை புதூர் பகுதியை சேர்ந்தவர் விமல்(வயது 35). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். விமல் நேற்று முன்தினம் சேலத்திற்கு காரில் வந்தார். பின்னர் அவர் 5 தியேட்டர் அருகே காரை நிறுத்திவிட்டு இறங்கினார்.
அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி ஒருவன் கத்தியை காட்டி மிரட்டி விமலிடம் இருந்து ரூ.200 மற்றும் செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்தார். இதுதொடர்பாக பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் விமலிடம் வழிப்பறி செய்ததாக திருச்சி மாவட்டம் ராம்ஜி நகரை சேர்ந்த சுந்தர்ராஜன்(27) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம், செல்போன், கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கொள்ளையர்கள்
அரியாகவுண்டனூரை சேர்ந்த சந்திரசேகர்(32) நேற்று முன்தினம் சேலம் புதிய பஸ்நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம ஆசாமி ஒருவன் சந்திரசேகரை மிரட்டி ரூ.200 மற்றும் செல்போனை பறித்தான். இதுதொடர்பான புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே உள்ள கள்ளுக்குடி பகுதியை சேர்ந்த குமார்(45) என்பவரை கைது செய்தனர். போலீசார் விசாரணையில் கைதான சுந்தர்ராஜன், குமார் ஆகியோர் ஆகிய இருவரும் பிரபல கொள்ளையர்கள் என்பதும், இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற வழக்குகள் பதிவாகி உள்ளதும் தெரியவந்தது.

Related Tags :
Next Story