கொடைக்கானல் அருகே பரிதாபம்: தடுப்பணையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
கொடைக்கானல் அருகே தடுப்பணையில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்தனர். பார்க்க சென்ற விவசாயி, ஜீப் கவிழ்ந்து பரிதாபமாக இறந்தார்.
கொடைக்கானல்,
கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை கிராமம் மன்னாடியர்தெருவை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவருடைய மகன் சத்ருகன் (வயது 15). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். அந்த கிராமத்தில் உள்ள பட்டாளம்மன் கோவில்தெருவை சேர்ந்த விவசாயி சண்முகம் மகன் அரசுத்துரை (13). இவனும் அந்த அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று, பூம்பாறை அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள ஒரு தடுப்பணைக்கு 2 பேரும் நண்பர்களுடன் குளிக்க சென்றனர். வனத்துறைக்கு சொந்தமான அந்த தடுப்பணை 7 அடி உயரம் கொண்டதாகும். தற்போது, நல்ல மழை பெய்வதால் தடுப்பணை நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகிறது. அந்த தடுப்பணையில் 2 பேரும் நண்பர்களுடன் உற்சாகமாக குளித்துக்கொண்டு இருந்தனர். திடீரென, சத்ருகன், அரசுத்துரை ஆகிய 2 பேரும் மாயமானார்கள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் அவர்களை தேடியும் கிடைக்கவில்லை. இதனால் கிராமத்துக்கு சென்று விவரத்தை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, கிராம மக்கள் பலரும் தடுப்பணை இருந்த பகுதிக்கு ஓடிவந்தனர்.
கொடைக்கானல் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தடுப்பணையில் இறங்கி மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் இணைந்து கிராம மக்களும் மாணவர்களை தேடினர். அதன்பிறகு, மாணவர்கள் சத்ருகன், அரசுத்துரை 2 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர். நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான அவர்களின் உடலை பார்த்த பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.
இது குறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன் ஆகியோர் மாணவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவர்கள் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தனரா? அல்லது பாறை இடுக்குகளில் சிக்கி பலியானார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும், வனப்பகுதிக்குள் இருக்கும் தடுப்பணைக்கு மாணவர்கள் எப்படி சென்றார்கள்? என்பது குறித்து வனச்சரகர் உஷ்மான் விசாரணை நடத்தி வருகிறார். மாணவர்கள் 2 பேர் தடுப்பணையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்த சோகம் தணிவதற்குள் மற்றொரு துயர சம்பவம் அரங்கேறிவிட்டது. தடுப்பணையில் மூழ்கி இறந்தவர்களின் உடல்களை பார்க்க பூம்பாறை கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒரு ஜீப்பில் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். பிறகு, அங்கிருந்து மீண்டும் பூம்பாறைக்கு திரும்பினர்.
இந்த நிலையில், அப்சர்வேட்டரி அருகே பைன்- பாரஸ்ட் பகுதியில் சென்ற போது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், சாலையோரத்தில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஜீப்பில் இருந்த கண்ணதாசன் (42) என்ற விவசாயி பரிதாபமாக இறந்தார். மேலும் அழகுராஜ், நாகப்பன், ஈஸ்வரன், தங்கம்மாள், வெள்ளைத்தாய், முருகேசுவரி ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே நாளில் 3 பேர் பலியானதால், அந்த கிராமமே சோகத்தில் மூழ்கிவிட்டது.

Related Tags :
Next Story