மார்பக புற்றுநோயில் இருந்து குணமடைந்தவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடிகை கவுதமி பங்கேற்பு


மார்பக புற்றுநோயில் இருந்து குணமடைந்தவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடிகை கவுதமி பங்கேற்பு
x
தினத்தந்தி 9 Oct 2017 4:15 AM IST (Updated: 9 Oct 2017 3:48 AM IST)
t-max-icont-min-icon

மார்பக புற்றுநோயில் இருந்து குணமடைந்தவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடிகை கவுதமி பங்கேற்பு

திருச்சி,

திருச்சி டாக்டர் கே.சாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளை மற்றும் டாக்டர் ஜி.விசுவநாதன் மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோயில் இருந்து குணமடைந்து வந்தவர்கள் இடையே கலந்துரையாடல் கூட்டம் திருச்சி சங்கம் ஓட்டலில் நேற்று நடந்தது. இதற்கு அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் டாக்டர் ஜவகர் நாகசுந்தரம் முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக நடிகையும், லைப் எகைன் அறக்கட்டளையின் நிறுவனருமான கவுதமி, மும்பை சேவை, வரி துறையின் உதவி ஆணையர் யமுனாதேவி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மீனா, சென்னை எஸ்.ஆர்.எம்.சி. மருத்துவமனையின் மார்பக புற்றுநோய் துறைத்தலைவர் டாக்டர் ஜெகதீஸ் சந்திரபோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மார்பக புற்றுநோயில் இருந்து குணமடைந்து வந்தவர்கள் இடையே நடிகை கவுதமி பேசுகையில், “எனக்கு மற்றும் உங்களுக்கெல்லாம் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனுபவங்கள் இருக்கிறது. அதனை தன்னம்பிக்கையுடன் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். புற்றுநோயில் இருந்து வெற்றி காணலாம் என்பதையும், அதனை எதிர்கொள்வது எப்படி, சிகிச்சை முறைகள் என்னென்ன என்கிற அனுபவத்தை ஒவ்வொருவரும் புற்றுநோய் பாதித்தவர்களிடம் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். அவர்களுக்கு தைரியம் கொடுத்து உயிரை காப்பாற்றுங்கள். இந்த விழிப்புணர்வை இன்று முதல் 10 பேருக்காவது பரப்புவேன் என்று உறுதி ஏற்று கொள்ளுங்கள். இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த ராணுவபடை போல் செயல்படுங்கள். எனக்கு புற்றுநோய் இருந்த போது எனது குடும்பத்தினரும், மகளும் துணையாக இருந்தனர்“ என்றார். முடிவில் அறக்கட்டளையின் செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார். 

Next Story