மழை வேண்டி விசித்திர வேண்டுதல் உருவபொம்மையை பாடை கட்டி ஊர்வலமாக எடுத்து சென்று எரித்தனர்
ஆரல்வாய்மொழியில் மழை வேண்டி உருவபொம்மையை பாடை கட்டி ஊர்வலமாக எடுத்து சென்று எரித்து வேண்டுதல் நிறைவேற்றினர்.
ஆரல்வாய்மொழி,
இந்த ஆண்டு தமிழகத்தில் பல இடங்களில் அதிக அளவு மழை பெய்தது. ஆனால், குமரி மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்ய வில்லை. குறிப்பாக ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன்புதூர் போன்ற பகுதிகளில் மிக, மிக குறைந்த அளவே மழை பெய்தது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பலத்த மழை பெய்யும் போது, இங்கு வெறும் சாரல் மட்டுமே காணப்பட்டது.
இதனால், ஆரல்வாய்மொழி பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, விவசாயம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மழை பெய்ய வேண்டி பொதுமக்கள் வேண்டுதல் செய்ய முடிவு செய்தனர்.
உருவ பொம்மை
இதற்காக ஒரு உருவ பொம்மையை பாடை கட்டி ஊர் முழுவதும் சுற்றி வந்து ஒதுக்குபுறமாக தீ வைத்து எரித்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வேண்டுதல் நடத்தி ஆரல்வாய்மொழி பகுதியில் மழை பெய்ததாக கூறப்படுகிறது.
அதன்படி, நேற்று இந்த விசித்திர வேண்டுதல் நடந்தது. இதற்காக ஆரல்வாய்மொழி வடக்கூர், இந்திரா நகரில் ஒரு பெண்ணின் உருவபொம்மை செய்து பாடை கட்டி, மலர் மாலை அணிவித்து, தள்ளு வண்டியில் வைத்தனர். பின்னர், செண்டை மேளம் முழங்க உருவபொம்மையை ஊர்வலமாக ஊர் முழுவதும் கொண்டு சென்றனர். அப்போது, பெண்கள் ஒப்பாரி வைத்த நிலையில் உருவபொம்மையின் பின்னால் சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மேல்சாந்தி பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார், பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆறுமுகம் பிள்ளை, குலசேகர விநாயகர் கோவில் தலைவர் ஈஸ்வரப்பிள்ளை, முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணன், சுயம்புலிங்கம், சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஊர்வலம் இந்திரா நகரில் இருந்து தொடங்கி வணிகர் தெரு, அழகியநகர், மிஷின் காம்பவுண்டு, வடக்கு பெருமாள்புரம், தெற்கு பெருமாள்புரம், தேவசகாயம் மவுண்ட் ஆகிய பகுதிகள் வழியாக சுற்றி வந்தது. இறுதியில் ஊரின் ஒதுக்குபுறமான இடத்தில் உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த வேண்டுதலில் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story