திருவண்ணாமலையில் சட்ட துணை தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம்


திருவண்ணாமலையில் சட்ட துணை தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 9 Oct 2017 5:40 AM IST (Updated: 9 Oct 2017 5:40 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்ட துணை தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்ட துணை தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி தலைமை தாங்கினார். நீதிபதிகள் நாராஜா, முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

இதில் வக்கீல்கள் சிவா, ஜெயபாலன், சுஜாதா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகாமில் சட்டங்கள் குறித்தும், ஆடைகள் அணிவது குறித்தும், அரசு திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.



Next Story