எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான மினி மாரத்தான் ஓட்டம்
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டையில் நேற்று பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வருகிற 14-ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்த மாரத்தான் ஓட்டம் பள்ளி மாணவிகள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவிகள், கல்லூரி மாணவர்கள் என 4 பிரிவுகளில் நடத்தப்பட்டது.
இதில் பள்ளி மாணவிகளுக்கான மினி மாரத்தான் ஓட்டத்தை வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்களுக்கான மினி மாரத்தான் ஓட்டத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கி வைத்தார். கல்லூரி மாணவிகளுக்கான மினி மாரத்தான் ஓட்டத்தை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி தொடங்கி வைத்தார். கல்லூரி மாணவர்களுக்கான மினி மாரத்தான் ஓட்டத்தினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
இந்த மினி மாரத்தான் ஓட்டமானது மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கி ரெயில் நிலைய ரவுண்டானா, டி.வி.எஸ். கார்னர், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், அரசு மகளிர் கலை கல்லூரி வழியாக சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவுபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் கணேஷ், ஆறுமுகம் எம்.எல்.ஏ, போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், எம்.ஜி.ஆரின் புகழை வெளிக்கொண்டுவரவே எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக விவசாயிகளின் நிலை குறித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நன்கு அறிவார். இதனால் தான் சம்பா தொகுப்பு திட்டத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.41 கோடி ஒதுக்கி உள்ளார் என்றார்.

Related Tags :
Next Story