பர்கூர் பேரூராட்சியில் சுகாதார பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
பர்கூர் பேரூராட்சியில் சுகாதார பணிகளை கலெக்டர் கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் மற்றும் பாலிநாயனப்பள்ளி கிராமம் ஆகிய இடங்களில் சுகாதார பணிகளை கலெக்டர் கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வீடு, வீடாக சென்று அங்குள்ள குடிநீர் தொட்டிகள், வீடுகளில் அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை கலெக்டர் கதிரவன் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுற்றி சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் லார்வா புழுக்கள் உருவாகாத வகையில் குடிநீர் தொட்டிகளை பராமரித்து உரிய முறையில் மேல் மூடி அமைக்க வேண்டும்.
சுகாதாரத்துறை சார்பில் நீர் தேங்கும் இடங்களில் கொசு மருந்து தெளித்தல், கொசு ஒழிப்பு புகை தெளிப்பான், கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கழிவுநீர் கால்வாய்களை சுகாதாரமாக பராமரிப்பது குறித்து அந்த பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். யாருக்கும் காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும். மேலும் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கதிரவன் கூறினார்.
இந்த ஆய்வின் போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பிரியாராஜ், வட்டார மருத்துவ அலுவலர் உதயசூரியன், பர்கூர் தாசில்தார் தணிகாசலம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேவகி, பையாஸ் அகமது, பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் மகேந்திரன், ஜீவானந்தம், விஜயகுமார், ரத்தினவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story