லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்: 2 பேர் பலி ரத்த தானம் செய்துவிட்டு திரும்பியபோது பரிதாபம்
தேவிபட்டினத்தில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ரத்த தானம் செய்துவிட்டு திரும்பிய ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை வாழுரை சேர்ந்த இபுராகிம் என்பவருடைய மகன் குத்தூஸ் (வயது24). ஆட்டோ டிரைவரான இவரும் அதே பகுதியை சேர்ந்த ரகுமத்துல்லா மகன் புகாரி (25) என்பவரும் நேற்று சித்தார்கோட்டையில் இருந்து மதுரைக்கு நோயாளி ஒருவருக்கு ரத்ததானம் செய்ய சென்றனர்.
பின்னர் மோட்டார்சைக்கிளில் ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது புல்லங்குடி விலக்கு சாலையை கடக்க முயன்றனர். அப்போது அங்கு நின்றுகொண்டு இருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 2 பேரும் தூக்கிவீசப்பட்டதில் குத்தூஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிருக்கு போராடிய நிலையில் இருந்த புகாரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே புகாரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தேவிபட்டினம் போலீசார் விரைந்து சென்று விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story