மாவட்ட செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் ரூ.3 கோடி மதிப்பில் பஸ் நிலையத்துக்கு புதிய கட்டிடம் + "||" + A new building for the bus station at Jeyangoda at Rs 3 crore

ஜெயங்கொண்டத்தில் ரூ.3 கோடி மதிப்பில் பஸ் நிலையத்துக்கு புதிய கட்டிடம்

ஜெயங்கொண்டத்தில் ரூ.3 கோடி மதிப்பில் பஸ் நிலையத்துக்கு புதிய கட்டிடம்
ஜெயங்கொண்டத்தில் ரூ.3 கோடி மதிப்பில் பஸ் நிலையத்துக்கு புதிய கட்டிடம் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்
வாரியங்காவல்,

ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்று பகுதியில் உள்ள கிராமப்புற மக்கள் கடலூர், நெய்வேலி, புதுச்சேரி, விருத்தாசலம் போன்ற முக்கிய ஊர்களுக்கும் திருச்சி, தஞ்சை, அரியலூர், மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும் செல்ல ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தின் வழியாக தான் செல்ல வேண்டும். இதனால் பஸ் நிலையம் போதிய இட வசதி இன்றி இருந்து வந்தது. இதனால் ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என்பது ஜெயங்கொண்டம் பகுதி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாகவும் இருந்து வந்தது. இதனையடுத்து ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் இடைவெளி நிரப்பும் திட்ட நிதியின் கீழ் 1.82 ஏக்கர் பரப்பில் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பஸ் நிலையத்தை விரிவுபடுத்தி புதிய கட்டிடம் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது. நிகழ்ச்சிக்கு அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் டீனாகுமாரி, ஜெயங்கொண்டம் தாசில்தார் வேல்முருகன், ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சங்கர், பொறியாளர் புகழேந்தி, நகர செயலாளர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் தங்க பிச்ச முத்து, ஜெயங்கொண்டம் ஒன்றிய கழக செயலாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 


தொடர்புடைய செய்திகள்

1. அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்நோயாளிகளின் உதவியாளர்கள் தங்குவதற்கு ரூ.50 லட்சத்தில் கட்டிடம்
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி திறந்து வைத்தனர்.
2. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவ-மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் அமைச்சர் வழங்கினார்
தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு, பள்ளி பாடப்புத்தகங்களை இழந்த மாணவ-மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.
3. காவல்துறை சார்பில் பெண்கள்–முதியோர்களுக்கு ஆபத்து காலத்தில் உதவும் புதிய செயலி அறிமுகம்
காவல்துறை சார்பில் பெண்கள்–முதியோர்களுக்கு ஆபத்து காலத்தில் உதவும் புதிய செயலி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
4. திருச்சி முக்கொம்பில் ரூ.410 கோடியில் புதிய கதவணை கட்டுவதற்கான மண் பரிசோதனை இன்றுடன் நிறைவு
திருச்சி முக்கொம்பில் ரூ.410 கோடியில் புதிய கதவணை கட்டுவதற்கான மண் பரிசோதனை செய்யும் பணி இன்றுடன்(வியாழக்கிழமை) நிறைவடைகிறது.
5. பருவமழை பெய்யாததால் வறண்டு கிடக்கும் விசுவகுடி அணை
பெரம்பலூர் மாவட்டத்தில் பருவமழை பெய்யாததால் விசுவகுடி அணை ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு போய் காணப்படுகிறது.