குடும்ப தகராறில் விஷம் குடித்த மனைவி உயிரிழந்ததாக கருதி தற்கொலை செய்த டிரைவர்
ஆரல்வாய்மொழி அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்த மனைவி இறந்ததாக கருதி ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி அருகே தாழக்குடி, வீரநாராயணமங்கலத்தை சேர்ந்தவர் மாணிக்கராஜ் (வயது63), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சரசம் (58). இவர்களுக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள். இதையடுத்து மாணிக்கராஜ் தனது மனைவியுடன் குடும்ப வீட்டில் தங்கியிருந்தார்.
இவருக்கு மது பழக்கம் உண்டு. வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது, மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.
நேற்று முன்தினம் மாணிக்கராஜ் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பின்பு, கணவன்–மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த சரசம் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், மனைவி விஷம் குடித்து மயங்கி விழுந்ததால் அவர் இறந்ததாக மாணிக்கராஜ் கருதினார். இதனால், அவரும் விஷம் குடித்து விட்டு வீட்டில் படுத்து கொண்டார். நேற்று காலை அவர்களது மூத்த மகன் தனது தந்தையை தேடி வீட்டுக்கு சென்றார். அங்கு மாணிக்கராஜ் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்ப தகராறு காரணமாக விஷம் குடித்த மனைவி இறந்ததாக எண்ணி ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story