சாலைகளை சீரமைக்க கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
நாகர்கோவில் நகரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி தி.மு.க. சார்பில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் நகரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும், குப்பை அள்ளுவதற்கு கூடுதல் வரி வசூலிக்க கூடாது, வலம்புரிவிளை குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும், நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் நகர தி.மு.க. சார்பில் நகராட்சி அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர செயலாளர் மகேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது, அவர் கூறியதாவது:–
‘நாகர்கோவில் நகரில் குண்டும், குழியுமாக காணப்படும் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுங்கள் என்று நகராட்சி நிர்வாகத்திடம் தி.மு.க. சார்பில் பல முறை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் கேட்டால் நிதி இல்லை என்று கூறுகிறார்கள். திடக்கழிவு மேலாண்மை விதியின்படி ரூ.500 வரை வரி செலுத்தும் வீடுகளில் குப்பை அள்ளுவதற்கு மாதம் ரூ.10–ம், ரூ.501 முதல் ஆயிரம் ரூபாய் வரை வரி செலுத்துபவர்களுக்கு ரூ.20–ம், அதற்கு மேல் வரி செலுத்துபவர்களுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரையும் கூடுதல் வரி வசூலிக்கப்படுகிறது. இதை தி.மு.க. கண்டிக்கிறது. எனவே இந்த முறையை நகராட்சி நிர்வாகம் நிறுத்த வேண்டும்.
சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்காவிட்டால், நாகர்கோவிலில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும்போது கருப்புகொடி ஏந்தி போராட்டம் அல்லது சாலை மறியல் நடந்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொருளாளர் கேட்சன், இளைஞரணி அமைப்பாளர் சிவராஜ், தில்லைசெல்வம், லாரன்ஸ், தாமரைபாரதி, நசீர், நெடுஞ்செழியன், ஷேக்தாவுது, வளர்அகிலன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story