அம்பர்நாத்தில் பட்டப்பகலில் துணிகரம் நகைக்கடையில் ரூ.2 கோடி தங்கம் கொள்ளை
அம்பர்நாத்தில் பட்டப்பகலில் நகை கடையில் ரூ.2 கோடி தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
அம்பர்நாத்தில் மகேந்திர ஜெயின் என்பவருக்கு சொந்தமான நகை கடை உள்ளது. நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு மகேந்திர ஜெயின் ஊழியர்களுடன் வெளியே சாப்பிட சென்றுவிட்டார். அவர்கள் சாப்பிட்டுவிட்டு 3.30 மணிக்கு கடைக்கு திரும்பினர்.
அப்போது கடையில் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டு இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு பொருட் கள் சிதறி கிடந்தன. மேலும் கடையின் பின் பக்க ஜன்னல் கம்பி வளைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த மகேந்திர ஜெயின் கடையில் இருந்த நகைகளை சரிபார்த்தார். அப்போது ரூ.2 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்க நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் கடையில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் மர்ம நபர் ஜன்னல் கம்பியை வளைத்து கடைக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கும் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் நகை கடையில் ரூ.2 கோடி தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அம்பர்நாத் பகுதி வியாபாரிகள் இடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story