கீழ்பவானி வாய்க்கால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் தேடும் பணி தீவிரம்
பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கதி என்ன?
பெருந்துறை,
என்று தெரியவில்லை. அவர்களது உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பெருந்துறை ஈரோடு ரோட்டை சேர்ந்தவர் குப்புசாமி. அவருடைய மகன் அன்பரசு (வயது 21). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அவரது மோட்டார்சைக்கிள், செருப்பு, ஆடை ஆகியவை கருக்கம்பாளையம் கீழ்பவானி வாய்க்கால் கரையோரத்தில் கிடந்தது. ஆனால் அவரை காணவில்லை. வாய்க்காலில் குளித்த அவர் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டது தெரியவந்தது.
இதற்கிடையே அதே வாய்க்காலில் குளித்த கல்லூரி மாணவர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார். பெருந்துறை அருகே உள்ள தொட்டம்பட்டி சி.எஸ்.ஐ.காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகன் விஸ்வபாரதி (17). பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கல்லூரி செமஸ்டர் தேர்வுக்காக ஹால்டிக்கெட் வாங்கிவிட்டு நேற்று மதியம் கருக்கம்பாளையம் கீழ்பவானி வாய்க்காலுக்கு கல்லூரியில் படிக்கும் அவருடைய நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது வாய்க்காலில் ஆழமான பகுதியில் அவர் குளித்தார். இதில் விஸ்வபாரதி தண்ணீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார். இதை பார்த்த அவருடைய நண்பர்கள் அருகே வாய்க்காலில் குளித்து கொண்டு இருந்தவர்களிடம் காப்பாற்றும்படி கூறினார்கள். உடனே அவர்கள் விஸ்வபாரதியை காப்பாற்ற முயன்றனர். எனினும் அவர்களால் முடியவில்லை.
அன்பரசு, விஸ்வபாரதி வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட தகவல் கிடைத்ததும் பெருந்துறை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டார்கள். அதுமட்டுமின்றி பவானியில் இருந்து நீச்சல் வீரர்கள் 5 பேர் வரவழைக்கப்பட்டு அவர்களும் வாய்க்காலில் இறங்கி தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து 2 பேரையும் தேடினார்கள். இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தேடும் பணி நிறுத்தப்பட்டது.
வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட 2 பேரின் கதி என்ன? என்று தெரியவில்லை. இதையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) 2 பேரையும் தேடும் பணி நடக்கிறது.
பெருந்துறை அருகே வாய்க்காலில் குளித்த கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவங்கள் குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story