வால்பாறை அருகே பட்டப்பகலில் சாலையில் உலா வந்த காட்டு யானைகள்
வால்பாறை அருகே இரவில் குடியிருப்புகளை சேதப்படுத்தி விட்டு பட்டப்பகலில் சாலையில் காட்டு யானைகள் உலா வந்தன. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர்.
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சிவா காபி எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்புக்குள் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு 5 யானைகள் கொண்ட கூட்டம் புகுந்தன. அவை செல்லத்துரை என்ற தொழிலாளியின் வீட்டின் சுவரை உடைத்து துதிக்கையை உள்ளே விட்டு வீட்டில் இருந்த பொருட்கள் முழுவதையும் உடைத்து சேதப்படுத்தின.சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து விழித்த செல்லத்துரை குடும்பத்தினர் தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை தூக்கி கொண்டு பின்பக்க கதவை திறந்து வெளியே ஓடி பக்கத்து வீட்டில் தஞ்சம் புகுந்தனர்.
இதே போல அருகில் இருந்த மாடசாமி, சரவணமுத்து, முத்தையா, ஜெயராஜ் ஆகியோரது வீடுகளின் சுவரையும் இடித்தன. நல்லவேளையாக தொழிலாளர்கள் அருகில் உள்ள வீடுகளில் தஞ்சம் புகுந்ததால் உயிர் தப்பினர். இது குறித்து தகவல் அறிந்த மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தொழிலாளர்கள் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டினர். வனப்பகுதிக்கு செல்லும் வழியில் மாரியம்மன் கோவிலின் கதவையும், அங்குள்ள தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதியின் கதவு,ஜன்னல் களையும் உடைத்து சேதப்படுத்தின. அதன்பிறகு அதிகாலை 4 மணிக்கு வனப் பகுதிக்குள் சென்றன.
பின்னர் நேற்று காலை மானாம்பள்ளி வனச்சரகர் சேகர் காட்டு யானைகள் சேதப்படுத்திய குடியிருப்புகளை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவரை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு காட்டு யானைகளின் அட்டகாசத்தில் இருந்து பாதுகாக்கும்படி கோரிக்கை விடுத்தனர். முன்பு வீடுகளின் முன்பு வாழை மரங்களை வளர்த்தோம். காட்டு யானைகள் வந்தால் அதை சாப்பிட்டு விட்டு சென்று விட்டன.
வாழை மரங்களை வளர்ப்பதால் தான் யானைகள் வரு கிறது. எனவே வாழை மரங்களை வளர்க்க வேண்டாம் என்று கூறினார்கள். அதன்படி இப்போது வாழை மரங்களை வளர்க்கவில்லை. வீடுகளை சேதப்படுத்துகிறது. எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.
இதே போல நேற்று அதிகாலை 5 மணிக்கு வெள்ளமலை எஸ்டேட், சோலைப்பாடி எஸ்டேட் பகுதி குடியிருப்புக்குள் நுழைந்த 12 காட்டு யானைகள் நாகமணி என்பவரின் வீட்டை சேதப்படுத்தின. அவர் பின்பக்க கதவை திறந்து கொண்டு தப்பி ஓடினார். பின்னர் எஸ்டேட் தொழிலாளர்களும், வனத்துறையினரும் விரட்டியதும் அருகிலிருந்த வனச்சோலைக்குள் போய் நின்று கொண்டன.
அதன்பிறகு மதியம் 2.30 மணிக்கு வெள்ளமலை எஸ்டேட், சோலைப்பாடி பகுதி எஸ்டேட் சாலையில் குட்டிகளுடன் காட்டு யானைகள் உலா வந்தன. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதோடு சாலையை ஒட்டி உள்ள தேயிலை தோட்டங்களில் பச்சை தேயிலை பறித்த தொழிலாளர்கள் யானைகளை பார்த்து அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் யானைகள் முகாமிட்டு வருவதால் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர்.

Related Tags :
Next Story