அரசு மருத்துவமனை முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


அரசு மருத்துவமனை முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2017 5:49 AM IST (Updated: 11 Oct 2017 5:48 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி பகுதியில் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய அளவு டாக்டர்களை நியமிக்க வேண்டும்,

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக உறுப்பினர் சந்திரராமன், ஒன்றிய செயலாளர் பாஸ்கர், நகர செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கிராமங்கள் தோறும் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் மருந்துகளை தெளிக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள டாக்டர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

குடவாசல்

இதைப்போல குடவாசல் பஸ் நிலையம் முன்பு தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் சுப்ரவேலு தலைமை தாங்கினார். நகர செயலாளர் நமசு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் கோவி.மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story