மராட்டிய மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு
மராட்டியத்தில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை மாநில அரசு குறைத்தது. இந்த வரி குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
மும்பை,
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
இதன் காரணமாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு தலா ரூ.2 குறைத்தது. மாநில அரசுகளும் தங்கள் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி பாரதீய ஜனதா கட்சி ஆளும் மராட்டிய மற்றும் குஜராத் மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டுவரியை குறைத்தன. அதன்படி, மராட்டியத்தில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டுவரி முறையே ரூ.2 மற்றும் ரூ.1 குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
சுதீர் முங்கண்டிவார் பேட்டி
இதுபற்றி நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார், மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைக்க முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஒப்புதல் அளித்தார். இது பொதுமக்களுக்கான எங்களது தீபாவளி பரிசு. இந்த வரி குறைப்பு முடிவு மூலம் மாநில அரசின் கருவூலத்துக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். மராட்டியத்தின் நிதி நிலைமை நல்ல வடிவத்தில் இல்லை என்றாலும், கூடுதல் நிதி சுமையை சந்திக்க அரசு தயாராக இருக்கிறது.
இவ்வாறு சுதீர் முங்கண்டிவார் தெரிவித்தார்.
குஜராத்திலும் குறைப்பு
இதேபோல், குஜராத் மாநிலத்திலும் பெட்ரோல்- டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி குறைந்துள்ளது. இது குறித்து அந்த மாநில முதல்-மந்திரி விஜய் ருபானி கூறியதாவது:-
மத்திய அரசின் அறிவுரையை ஏற்று குஜராத் அரசு இன்று (நேற்று) நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை 4 சதவீதம் (24 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக) குறைக்கிறது. இதன்மூலம் லிட்டருக்கு பெட்ரோல் விலை ரூ.2.93 குறைந்து ஒரு லிட்டர் ரூ.67.53-க்கும், டீசல் விலை ரூ.2.72 குறைந்து ஒரு லிட்டர் ரூ.60.77-க்கும் கிடைக்கும்.
இதன்மூலம் மாநில அரசுக்கு ஆண்டுக்கு மதிப்பு கூட்டு வரியில் ரூ.2,316 கோடி இழப்பு ஏற்படும். மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்படுகிறது. இதற்கும் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மக்களின் சுமையை குறைப்பதற்காகவே இந்த நிரந்தர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இமாசல பிரதேசம்
பெட்ரோல், டீசல் விற்பனையையும் ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று காங்கிரஸ் கூறியதற்கு, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வரியை குறையுங்கள் என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியிருந்தார்.
இப்போது காங்கிரஸ் தலைமை கூறியதற்கு மாறாக அக்கட்சி ஆளும் இமாசல பிரதேச மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி ஒரு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு பெட்ரோல் லிட்டருக்கு 80 பைசாவும், டீசல் லிட்டருக்கு 60 பைசாவும் குறைகிறது.
குஜராத் போலவே இமாசல பிரதேசத்திலும் ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story