தாம்பரம் பஸ் நிலையம் அருகே மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்


தாம்பரம் பஸ் நிலையம் அருகே மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2017 6:05 AM IST (Updated: 11 Oct 2017 6:05 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா மீதான ஊழல் குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் பஸ் நிலையம் அருகில், காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா மீதான ஊழல் குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ரூபி மனோகரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை உள்பட 100–க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், அமித்ஷா மகன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்தும் கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தாம்பரம் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.


Next Story